ELANKOVAN  
 
  windows vista 03/28/2024 2:46pm (UTC)
   
 

விண்டோஸ் விஸ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண்டோஸ் விஸ்டா
(மைக்ரோசாப்ட் விண்டோஸ் குடும்பம்)
திரைக்காட்சி

விண்டோஸ் விஸ்டாவின் திரைக்காட்சி
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட்
Web site: www.microsoft.com/windowsvista/
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: நவம்பர் 8 2006 info
தற்போதைய பதிப்பு: 6.0 (Build 6000) (ஜனவரி 30 2007) info
மூலநிரல் : மூடிய நிரல் / Shared source
அனுமதி: MS-EULA
Kernel type: Hybrid kernel
Support status
தற்போது ஆதரவில் உள்ளது.

விண்டோஸ் விஸ்டா என்பது மைக்ரோசாப்ட்டின் பிந்தைய வர்தகரீதியாக வெளிவந்த விண்டோஸ் பதிப்பாகும். 22 ஜூன் 2005 இப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் இது லாங் ஹான் என அறியப் பட்டது.மைக்ரோசாப்ட் தன் திறமையை நிரூபிக்க விஸ்டா பதிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி விஸ்டாவின் வர்தகப் பதிப்பு நவம்பர் 2006 இலும் பாவனையாளரின் பதிப்பானது ஜனவரி 30, 2007 இலும் வெளிவந்தது.இந்தப் பதிப்பானது மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் XP வெளிவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்தே வெளிவந்திருக்கின்றது. இத்திட்டமானது கணினி வரலாற்றிலேயே மிகப் பெரியதும் மிகப் பணச் செலவானதுமான ஓர் திட்டமாகும். விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். "விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] மேலோட்டம்

விண்டோஸ் விஸ்டாவானது புதிய பல வசதிகளைக் அறிமுகப் படுத்துகின்றது. ஏரோ(en:Windows_Aero) என்றழைக்கப்படும ்மேம்படுத்தப் பட்ட படங்களுடனான பயனர் இடைமுகம் en:Graphical_user_interface மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடற் தொழில் நுட்பம், வீட்டு வலையமைப்பில் கணினிகளிற்கிடையே தொடர்புகளை அதிகரிக்க en:Peer-to-peer தொழில்நுட்பத்தினூடாக கோப்புக்களைப் பகிர்தலை இலகுவாக்க்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்டின் பிரதித் தலைவரும் விஸ்டா விற்குப் பொறுப்பானவருமான ஜிம் ஆல்சின் ஓராயிரத்திற்கு மேற்பபட்ட புதிய வசதிகளும் தொழில் நுட்பங்களும் இதில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பில்கேட்ஸ் 12 ஆண்டுகளிற்கு முன்னர் வெளிவந்த வின்டோஸ் 95 இலிருந்து விண்டோஸ் மேம்படுத்தல் இதுவாகவே இருக்கும் என்றார்.

மைக்ரோசாப்டின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இயங்கு தளங்களின் பாதுகாப்பு இருக்கும். விண்டோஸ் XP இயங்குதளத்தின் முக்கிய குறைகளாக கணினி வைரஸ், கெட்டமென்பொருட்கள் en:malware, buffer overflows ஆகியவைகளே இருக்கின்றன.

[தொகு] வசதிகள்

தமிழ் உட்பட இந்திய மொழிகளை இதன் முந்திய பதிப்புப் போன்று கட்டுப்பாட்டுப் பகுதியூடாக (கண்றோல் பனலூடாக) "Complex Script" களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அல்லாமல் நேரடி ஆதரவினையும் வழங்குகின்றது. சிங்களம் முதன் முறையாக விண்டோஸ் கணினிகளில் ஒருங்குறி முறையில் விஸ்டாவூடாக ஆதரவளிக்கப்படுகின்றது.

புதிய தேடும் வசதி: வேகமாகத் தேடும் பாளம் ("*quick search pane*,") என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை டைப் செய்து அதனுடன் தொடர்பான பைல்களின் பெயர்களைப் பெறலாம். தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை போல்டர்களாகச் சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் கிடைக்கையில் இந்த போல்டர்கள் அப்டேட் செய்யப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி போல்டரை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த போல்டரில் சேர்க்கப்படும்.

ஐகான் : புதிய பொருள் இனி ஐகான்கள் பைல் வகையைக் குறிக்காது; ஒவ்வொரு பைலின் டெக்ஸ்ட்டைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் டாகுமெண்ட்டின் ஐகான் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த ஐகான் படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை பைலில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும்.

லேப் டாப் கம்ப்யூட்டரில் புதுமை: விண்டோஸ் விஸ்டா லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத்திலும் மாறுதல்களைக் கொண்டு வர இருக்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்காமல் கூட ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் செட் அப் செய்த தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும்.

நெட்வொர்க்கில் இணைக்கப்படுகையில் அதனுடன் இணைந்த கம்ப்யூட்டர்களின் அனைத்து பைல்களையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் உள்ள மியூசிக் பைல்களையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும்.

 

[தொகு] குறைபாடுகள்

விண்டோஸ் விஸ்டா நாளை முழுமையாகக் காட்டதிருப்பதைக் காணலாம்
விண்டோஸ் விஸ்டா நாளை முழுமையாகக் காட்டதிருப்பதைக் காணலாம்

விண்டோஸ் விஸ்டா தமிழ் உட்பட பல இந்திய மொழிகளை ஆதரித்தாலும் அவை நேரம் மற்றும் திகதியினைக் காட்டும்போது திகதியின் ஒருபகுதியை மாத்திரமே காட்டும் இப்பிழையானது விண்டோஸ் 2000 காலப் பகுதியில் இருந்தே வழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இக்குறைபாடானது இற்றைவரை தீர்க்கப்படவில்லை. தவிர விண்டோஸ் விஸ்டாவுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் காலண்டரிலும் இக்குறைபாடுண்டு.

[தொகு] வெளியிணைப்பு

 
 
 
 
 
 
 
 
 
 
Today, there have been 1 visitors (1 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free